‘துப்பாக்கி முனை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள ‘துப்பாக்கி முனை’ படத்திற்கு குடும்பத்தினருடன் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இது. எல்.வி.முத்துகணேஷ் இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘துப்பாக்கி முனை’ படத்தின் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாக, என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாக நடித்திருக்கிறார். அவருடைய வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தில் வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.

Read Previous

வடசென்னை – அமீரா அது, அனுராக் காஷ்யப் ஆச்சரியம்

Read Next

சவால்களை எதிர்த்துப் போராடும் ‘தேவ்’