நவம்பர் 27-ல் ‘இஞ்சி இடுப்பழகி’ வெளியீடு

பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் பிரகாஷ் கொவேலமுடி இயக்கத்தில் மரகதமணி இசையமைப்பில் ஆர்யா, அனுஷ்கா மற்றும் பலர் நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி’ திரைப்படம் நவம்பர் மாதம் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் அனுஷ்கா தனது உடல் எடையைக் கூட்டி குண்டான பெண்  கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.

‘பாகுபலி, ருத்ரமாதேவி’ என அடுத்தடுத்து ஹிட்களைக் கொடுத்து வரும் அனுஷ்காவுக்கு தெலுங்கில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.அது இந்தப் படத்திற்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நவம்பர் 27ம் தேதியன்று சுமார் 1500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

 

Read Previous

மனோரமா நடித்த கடைசி (குறும்) படம் – தாயே நீ கண்ணுறங்கு – வீடியோ

Read Next

சர்ச்சைக்குள்ளாகும் பாரதிராஜாவின் தமிழ்ப் பாசம்