இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு அமலா பால் நடிகையை மட்டும்தான் தெரியும். அமலா என்பரை அதிகம் தெரிந்திருக்காது.
டி.ராஜேந்தர் இயக்கம் நடிப்பில் வெளிவந்த ‘மைதிலி என்னை காதலி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகமானவர். தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர்.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவைத் திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்தவர் சமீபத்தில் தமிழில் ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்திருந்தார்.
தற்போது கமல்ஹாசன் அடுத்து நடிக்க உள்ள தமிழ், தெலுங்கில் தயாராகம் ஒரு புதிய படத்தில் சிறப்புத் தோற்றம் ஒன்றில் அமலா நடிக்கப் போகிறாராம்.
கமல்ஹாசன் அழைத்த பிறகு எப்படி நடிக்காமல் இருக்க முடியும் என்கிறார் அமலா. தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வந்தால் தமிழில் நடிப்பேன் என்கிறார்.