‘வேதாளம்’ படத்தை தமிழ்த் திரையுலகமே வியக்க வைக்கும் அளவிற்கு வசூல் சாதனை புரிய வைத்த வெற்றியைக் கொடுத்த அஜித் இன்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாதக் கடைசியில்தான் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக முன்னர் செய்திகள் வெளியாகின. ஆனால், இன்றிரவே அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
தீபாவளிக்கு முன்னதாக திருப்பதிக்கு சாமி கும்பிடச் சென்ற போது கூட அஜித் காலை தாங்கி தாங்கித்தான் நடந்து சென்றார்.
அடுத்த படம் என்ன என்று அஜித் முடிவு செய்யாத நிலையில் அறுவை சிகிச்சையை முடித்து, சில மாதங்கள் ஓய்வில் இருக்க உள்ளார். அடுத்த பட அறிவிப்பு வர இன்னும் கொஞ்ச நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.