இயக்கத்திலும் அசத்த வரும் ஆன்டனி

பல வெற்றிப் படங்களுக்கும், பல முன்னணி இயக்குனர்களுக்கும் அபிமான எடிட்டராகப் பணியாற்றியவர் ஆன்டனி.

வழக்கமான படத் தொகுப்பிலிருந்து வேகமான எஃபெக்ட்ஸ்களுடன் கூடிய படத் தொகுப்பை தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தியதில் முன்னோடி.

வரும் 20ம் தேதி வெளிவர இருக்கும் ‘ஒரு நாள் இரவில்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷட்டர்’ என்ற படத்தின் ரீமேக்தான் ‘ஒரு நாள் இரவில்’.

சத்யராஜ், அனுமோள், புதுமுகம் வருண், யூகி சேது மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். தின்க் பிங்க் ஸ்டுடியோ சார்பாக இயக்குனர் விஜய் வழங்க, ஏ.எல்.அழகப்பன், சாம் பால் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.

“மலையாளத்தில் இருந்து ரீமேக் செய்திருந்தாலும் தமிழுக்காக சில காட்சிகளில் மாற்றம் செய்திருக்கிறார். சத்யராஜ்தான் படத்தின் ஹீரோ. அவருக்கு மிகவும் பொருத்தமான ஒரு கதாபாத்திரம். இந்தப் படத்திற்குப் பிறகு படத்தில் நாயகியாக நடித்துள்ள அனுமோள் தமிழிலும் பேசப்படுவார். புதுமுகம் வருண், இப்படத்திற்காக மூன்று மாதங்கள் வரை நடிப்புப் பயிற்சி பெற்று, ஆட்டோ டிரைவராக சிறப்பாக நடித்திருக்கிறார்.

பல வெற்றிப் படங்களுக்கு எடிட்டிராகப் பணியாற்றியிருந்தாலும் முதல் படத்தையே ஒரு ரீமேக் படமாக இயக்குவது ஏன் என்று கேட்டதற்கு,

“ஒரு ரீமேக் படத்தை இயக்கணுமான்னு நான் நினைக்கலை. அந்தப் படத்தைப் பார்த்து ஒரு ரெண்டு மாசம் கழிச்சிதான் ஆரம்பிச்சோம். ஒரு புதுப் படமா, நேரடிப் படம் இயக்கிற மாதிரியான ட்ரீட்மென்ட்தான் படத்துல இருக்கும். ஒரு யதார்த்தமான படமா எல்லாரும் ரசிக்கிற மாதிரியான ஒரு படமா இந்தப் படம் இருக்கும். நிச்சயம் ஒரு புது அனுபவத்தைப் பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு இருக்கும்,” என்கிறார் ஆன்டனி.

24 மணி நேரத்திற்குள் நடக்கும் ஒரு யதார்த்த அனுபவத்தை இந்த ‘ஒரு நாள் இரவில்’ படம் நிச்சயம் தரும் என்கிறார்கள் படக் குழுவினர்.

தொடர்ச்சியாக பல வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.

Read Previous

‘வேதாளம்’ – பாராட்டித் தள்ளும் குஷ்பு

Read Next

Uttama Villain wins awards at Los Angeles

Most Popular