கஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு நிவாரண உதவிகளை பல நடிகர்கள் வழங்கி வருகிறார்கள்.

பலரும் உதவிகளை அறிவித்தாலும் அவர்கள் நேரிடையாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. அவர்களது ரசிகர்கள்தான் சென்று உதவி செய்து வருகிறார்கள்.

ஆனால், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து நேரிடையாக உதவிகளைச் செய்து வருகிறார்.

ஒரு பாட்டி, புயலால் பாதிக்கப்பட்ட அவருடைய வீட்டைப் பற்றி கண்ணீருடன் சொன்ன வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. அதைத் தொடர்ந்து புயலால் வீடிழந்த 50 பேருக்கு தலா 1 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.

சமூக வலைத்தளத்தின் மூலம் வெளிவந்த, அந்த பாட்டி யார் என்பதைக் கண்டுபிடித்து அவருக்கு வீடு கட்டித் தரும் வேலையை ராகவா லாரன்ஸ் ஆரம்பித்துள்ளார்.

இன்று அதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.

உதவிகள் மட்டும் நிவாரணம் அல்ல, நேரில் ஆறுதல் சொல்லி, செய்வது அதைவிடப் பெரிய நிவாரணம் என்பதை ராகவா லாரன்ஸ் மற்றவர்களுக்கும் புரிய வைத்துள்ளார்.

Read Previous

மாரி 2 – ரௌடி பேபி…பாடல் வரிகள் வீடியோ

Read Next

விஜய் டிவியில் ‘ராதா கிருஷ்ணா’ புதிய தொடர்