சமூக சேவகியாக மதுமிதா நடிக்கும் ‘புத்தன் இயேசு காந்தி’

ப்ளசிங் என்டர்டெயினர்ஸ் சார்பாக பிரபாதீஷ் சாமுவேல், கபிலன் சிவபாதம் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘புத்தன் இயேசு காந்தி’.

அறிமுக இயக்குநர் வெற்றிவேல் சந்திரசேகர் இயக்கும் இப் படத்தில் கிஷோர், வசுந்தரா, அசோக், மதுமிதா, கயல் வின்சென்ட் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

கிஷோர் தூக்குத் தண்டனை கைதியாக நடிக்க, வசுந்தராவும், அசோக்கும் பத்திரிகையாளர்களாக நடிக்கிறார்கள். மதுமிதா சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் ‘சமூக சேவகர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த கேரக்டருக்காக, மதுமிதா ‘புக்கர்’ விருது பெற்ற அருந்ததி ராயை ரோல் மாடலாக ஏற்று அவரின் நடை, உடை பாவனைகளை உள்வாங்கி நடிக்கிறாராம். இதற்காக அருந்ததி ராய் பங்கேற்ற நிகழ்ச்சி வீடியோக்களை பார்த்து அந்தக் கேரக்டருக்குத் தன்னை தயார் படுத்தியுள்ளார்.

அண்மையில் தொலைக்காட்சி சேனலில் நடக்கும் விவாத நிகழ்ச்சியில் மதுமிதா மற்றும் கிஷோர் பங்கேற்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது மக்கள் பிரச்சனைகளை பற்றிப் பேசி நடிக்கும் காட்சியில் மதுமிதா, க்ளிசரின் போடாமல் உண்மையாகவே அழுது நடித்தார்.

அவர் அழுது கொண்டே வசனம் பேசியது, அங்கிருந்த படப்பிடிப்புக் குழுவினரை உருக வைத்து விட்டதாம். அந்தக் காட்சி முடிந்ததும் எல்லோரும் கைதட்டி மதுமிதாவை பாராட்டினார்கள்.

சமீபத்தில் வெளியான ‘அழகு குட்டி செல்லம்’ படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். வேத் சங்கர் இசையமைக்கிறார். ‘ஆள்’ மற்றும் ‘மெட்ரோ’ படங்களின் படத் தொகுப்பாளர் ரமேஷ் பாரதி எடிட்டிங் செய்கிறார்.

‘புத்தன் இயேசு காந்தி’ திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது.

Read Previous

Dad, daughter together on screen ?

Read Next

From horror to comedy