பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்துள்ள ‘கதகளி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளிவந்தது.
இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
“பசங்க 2’ படத்திற்கம் ‘கதகளி’ படத்திற்காகவும் கொடுத்த ஆதரவிற்கு நன்றி.
விஷால் சாரை அடிக்கடி சந்திப்பது உண்டு. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் போகிற போக்கில் இந்தப் படத்தின் கதையைச் சொன்னேன். ஒரு 20 நிமிடக் கதையைத்தான் அவருக்கு சொன்னேன். கதையைச் சொல்லும் போதே அவர் சரியா கணிச்சி இந்தப் படத்தைப் பண்ணலாம்னு சொன்னாரு.
அடுத்த ஒரு மாதத்தில் படப்பிடிப்புக்கு போகலாம் என்று சொல்லிவிட்டார். இதற்கு முந்தைய விஷால் நடித்த படங்களை விட, இந்தப் படத்தை குறைந்த செலவில் 65 நாட்களில் படமாக்கிக் கொடுத்தேன்.
அடுத்து ‘இது நம்ம ஆளு’ படத்துக்காகக் காத்திட்டிருக்கேன். பிப்ரவரி கடைசி இல்லன்னா மார்ச் மாதம் முதலில் வந்துடும். இந்தப் படமும் என்னுடைய பயணத்துல வேற விதமான படமா கண்டிப்பா அமையும்.
சிம்புவையும், நயன்தாராவையும் சேர்த்து வச்சி படம் பண்ண முடியுமான்னு சந்தேகத்தோட கேட்டாங்க. அதை பண்ணியாச்சி, அதே மாதிரி படத்தோட பிரமோஷனுக்கு நயன்தாராவும் கண்டிப்பா வருவாங்க,” என நம்பிக்கையுடன் கூறுகிறார் பாண்டிராஜ்.