ரஜினி முருகன் – வசூலில் நம்பர் 1

2016ம் வருடப் பொங்கலுக்கு வெளிவந்த ‘ரஜினி முருகன், கதகளி, தாரை தப்பட்டை, கெத்து’ ஆகிய படங்களில் ‘ரஜினி முருகன்’ படம் வசூலில் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக கோடம்பாக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

14ம் தேதி வெளியான இந்தப் படம் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 20 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக வினியோகஸ்தர்கள் மத்தியில் பேசிக் கொள்கிறார்கள்.

மற்ற படங்களைக் காட்டிலும் ‘ரஜினி முருகன்’ படத்திற்கு குடும்பத்து ரசிகர்களின் வரவு அதிகமாக இருப்பதே படத்தின் வசூலுக்குக் காரணமாக அமைந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் ‘கதகளி’ படமும், ‘தாரை தப்பட்டை, கெத்து’ அடுத்தடுத்த இடங்களிலும் இருக்கிறது.

‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் நிலவரம் மேலும் உயர்ந்துள்ளது.

Read Previous

Theri is all over

Read Next

‘கதகளி’ வரவேற்பு – பாண்டிராஜ் மகிழ்ச்சி