இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரும், தமிழ்த் திரையுலகில் இன்று வரை நம்பர் 1 நடிகராக இருந்து வரும் ரஜினிகாந்திற்கு ‘பத்ம விபூஷண்’ விருது அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
அதைத் தொடர்ந்து பலரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
தனக்கு ‘பத்ம விபூஷண்’ வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
“பத்ம விபூஷன் விருது வழங்கப்படுவதற்காக மிகவும் உயர்ந்த கௌரவமாக பெருமைப்படுகிறேன். என்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் நண்பர்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் என் நன்றி,” என ரஜினிகாந்த் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் தனக்கு வாழ்த்து சொன்ன ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், குஷ்பு உள்ளிட்டவர்களுக்கும் தனித் தனியாக நன்றி தெரிவித்துள்ளார்.