தமிழ்த் திரையுலகில் நடிகர்களும், நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் ஈடுபடுவது சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது.
ஏற்கெனவே பல இளம் நடிகர்கள் டிவிட்டரில் தனி கணக்கு ஆரம்பித்துள்ள நிலையில் நடிகர் கமல்ஹாசன் இன்று டிவிட்டரில் தனி கணக்கு ஒன்றைத் துவங்கினார்.
அஜித், விஜய் உள்ளிட்டவர்கள் இன்னும் டிவிட்டரில் வராத நிலையில், தமிழ்த் திரையுலகின் இரு பெரும் துருவங்களில் ஒருவரான கமல்ஹாசன் டிவிட்டரில் வந்திருப்பது அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்கிறது. கமல்ஹாசன் ஏற்கெனவே ஃபேஸ்புக்கிலும், யு டியூப் வீடியோ தளத்தில் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன் டிவிட்டருக்கு வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவரை 15,000 தொடர்பாளர்கள் தொடர ஆரம்பித்தனர்.
ரஜினிகாந்த் ‘கோச்சடையான்’ படம் வெளிவருவதற்கு முன்பாக டிவிட்டரில் கணக்கு ஆரம்பித்தார். ஆனால், அவர் எப்போதாவது ஒரு முறைதான் டிவிட்டரில் பதிவுகளை இடுகிறார்.
ஆனால், கமல்ஹாசன் அப்படி இருக்க மாட்டார் என்று நம்புவோமாக…
கமல்ஹாசனின் டிவிட்டர் முகவரி… https://twitter.com/ikamalhaasan