‘வேதாளம்’ வசூலை நோக்கி ‘ரஜினி முருகன்’ ?

2015ம் ஆண்டு வெளிவந்த படங்களில் ‘வேதாளம்’ படத்தின் வசூல் மிகப் பெரும் அளவில் இருந்து முதலிடத்தைப் பிடித்தது.

அதன் பிறகு கடந்த இரண்டு மாதங்களில் வேறு எந்தப் படமும் அந்த வசூலில் பாதியைக் கூட எட்டவில்லை.

ஆனால், கடந்த 14ம் தேதியன்று வெளிவந்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் ‘வேதாளம்’ வசூலைத் தொட வாய்ப்புள்ளதாக வினியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படம் வெளியான நான்கு நாட்களில் 20 கோடி ரூபாய் வசூலித்த ‘ரஜினி முருகன்’ திரைப்படம் கடந்த 12 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள்.

‘வேதாளம்’ படத்தின் வசூல் 60 கோடி ரூபாயைக் கடந்த வசூலாக இருந்தது. விரைவில் அந்த வசூலை ‘ரஜினி முருகன்’ கடப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள்.

‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியும், வசூலும் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

Read Previous

கமல்ஹாசனும் டிவிட்டரில் நுழைந்தார்…

Read Next

ஜப்பானில் அகிரா குராசாவா கல்லறையில் மிஷ்கின் அஞ்சலி