முனைவர் V விஜய் ஆனந்த் ஸ்ரீ ராம் இயக்கத்த்தில் ஜோஸ்டார் எண்டெர்ப்ரைசஸ் நிறுவனம் சார்பாக கோடீஸ்வர ராஜு தயாரிக்கும் திரைப்படம் ‘ஆகம்’.
நமதுக் கல்வித் துறையில் உள்ள சீர்கேடுகளையும் , அதனை களைக்கும் வழி முறைகளையும் சுவாரசியமாக கூறும் படம் தான் ‘ஆகம்’.
கல்வி குறித்தும் , நமது நாட்டின் அறிவு செல்வங்கள் மற்ற நாடுகளுக்கு செல்வம் நாடி போவதால் வரும் மனித வள இழப்பையும் கூறும் கதை .
என் முதல் படத்திலேயே இத்தகைய சவாலான கதையை தேர்ந்து எடுத்ததற்கும், திறனுடன் செயல்பட்டதற்கும் என்னுடைய குழுவினருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். வெறும் நுனிப்புல் மேயும் கதை அல்ல என்பதால் , நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டி இருந்தது.கல்வி துறையில் பல வருடங்கள் இருந்தப் படியால் கவனமாக கையாள வேண்டியதாக இருந்தது.
வேலை வாய்ப்பு சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான உழலை பற்றிய படம். சோஷியல் த்ரில்லர் பாணியில் வரும் இப்படத்தின் கதை பல வருடத்தின் ஆய்வுக்கு பின் எழுதப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்திற்காகவும், படத்தில் உள்ள அழ்ந்த சமுதாய கருத்துக்காகவும் ஒப்புகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது,” என்கிறார் இயக்குனர்.