படம் முழுவதும் ‘பயம் ஒரு பயணம்’

ஆக்டோ ஸ்பைடர் நிறுவனத்தின் சார்பில் எஸ்.துரை, தயாரிக்கும் ‘பயம் ஒரு பயணம்’.

மணிசர்மா இயக்கத்தில், ஒய்எஸ். பிரசாத் இசையமைப்பில் ‘உன்னை போல் ஒருவன்’ பரத், விசாகா சிங், மீனாக்ஷி தீட்சித், சிங்கம் புலி, ஊர்வசி, ஞானவேல், யோகி பாபு, ‘லொள்ளு சபா’ மனோகர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

‘தமிழ் சினிமாவில் தொடர்ந்து நிறைய பேய்ப் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தப் படங்களிலிருந்து ‘பயம் ஒரு பயணம்’ படம் மாறுபட்டு இருக்கும்.

பொதுவாக பேய்ப் படங்கள் என்றாலே சமீப காலத்தில் நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கிறார்கள். ஆனால், இந்தப் படத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை படத்தின் தலைப்பைப் போலவே பயம் இருந்து கொண்டேயிருக்கும்.

ஹாலிவுட்டில் வெளிவந்த ‘ஈவில் டெட்’ படம் போன்ற ஒரு பயமுறுத்தல் படத்தில் இருக்கும்.

கமல்ஹாசன் நடித்த ‘உன்னைப் போல் ஒருவன்’ படத்தில் நடித்த பரத் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் நாயகி விசாகா சிங் நடிக்கிறார். மீனாட்சி தீட்சித் மற்றொரு கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஊர்வசி முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

Read Previous

வெளிநாட்டு மோகம் பற்றிச் சொல்லும் ‘ஆகம்’

Read Next

‘King Of Dance’ – New reality show in Vijay Tv

Most Popular