மீண்டும் இணைந்த ‘சத்யா’ கூட்டணி

சத்யராஜ் அவரது மகன் சிபிராஜுடன் இணைந்து நடித்த ‘ஜாக்சன் துரை’ வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்கள்.

கடந்த ஆண்டின் கவனிக்கத்தக்க படமாக சிபிராஜ் நடித்து வெளிவந்த ‘சத்யா’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தில் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார்.

படத்தின் மற்ற தொழில்நுட்பக்குழுவினர் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர் சார்பில் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இப்படத்தினை தயாரிக்க உள்ளார்கள்.

Read Previous

தமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 23, 2019 வெளியான படங்கள்

Read Next

விக்ரம் தங்கை மகன் நாயகனாக அறிமுகம்