காக்கி – விஜய் ஆண்டனி ஜோடியாக இந்துஜா

இயக்குனர் விஜய் மில்டன் – விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம்.

அனுபவம் வாயந்த இயக்குனர் ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் ‘காக்கி’ திரைப்படத்தின் உரிமைகளை அந்நிறுவனம் வாங்கியிருக்கிறது.

சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா, சன் டிவி புகழ் கதிர் மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

ஜுன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் ஷிமோகா, பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெற உள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஸாவின் ஒளிப்பதிவில், அவ்கத் இசையில், வைரமுத்துவின் பாடல் வரிகளில், கனல் கண்ணன் – ஷியாம் – ன் சண்டைக் காட்சி அமைப்பில் தயாராகும் இப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் குழு இதுவரை தயாராகியிருக்கும் இப்படத்தின் எடிட் செய்த பதிப்பினைப் பார்வையிட்டனர். பின்னர், கதையின் ஆழத்தையும், தகுதிகளையும் கருத்தில் கொண்டு, இப்பட உரிமைகளை வாங்க தீர்மானித்துள்ளார்கள்.

மேலும், தயாரிப்பாளர் ஓபன் தியேட்டர் உடன், மார்க்கட்டிங், விநியோகம் மற்றும் விளம்பரம் ஆகியவற்றில் இணைந்துப் பணியாற்றவும் முடிவு செய்திருக்கிறது.

ஜனவரி 2020ல் இப்படத்தை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதமும், டீசர், டிரைலரை அக்டோபர் மாதமும் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

Read Previous

விக்ரம் தங்கை மகன் நாயகனாக அறிமுகம்

Read Next

மெய் – விமர்சனம்