‘கபாலி’ டீசரின் அதிரடி சாதனை

இணைய உலகில் அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் என பலரும் சொல்வதுண்டு.

ஆனால், அதையெல்லாம் மீறி ரஜினிகாந்தின் ரசிகர்கள் இன்று தாங்கள் யார் என்பதைக் காட்டிவிட்டார்கள்.

இன்று காலை 11 மணிக்கு வெளியான ‘கபாலி’ டீசர் சற்று முன்னர் வரை 16 லட்சம் ஹிட்ஸ்களையும், 1,60,000 லைக்குகளையும் கடந்து யு டியூப் வரலாற்றிலும், தமிழ்ப் பட டீசர் வரலாற்றிலும் தனி சாதனையை படைத்துள்ளது.

காலை டீசர் வெளியான 5 நிமிடங்களிலேயே 40000 ஹிட்ஸ்கள், 40000 லைக்குகள் என அதிரடியாக ஆரம்பமானது போகப் போக தாறுமாறாக ஏறிக் கொண்டேயிருந்தது.

20 நிமிடங்களில் 40000 லைக்குகள், 30 நிமிடங்களில் 60000, 50 நிமிடங்களில் 75000, 1 மணி நேரத்தில் 85000, 1 மணி நேரம் 10 நிமிடத்தில் 90000, 1 மணி நேரம் 30 நிமிடத்தில் 100000, 2 மணி நேரத்தில் 1,30,000, 4 மணி நேரத்தில் 1,50,000, 7 மணி நேரத்தில் 1,65,000 லைக்குகள் என அசத்தல் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஹிட்ஸ் எண்ணிக்கையை மட்டும் யு டியூப் சில மணி நேரங்களுக்கு அப்டேட் செய்யாமல் இருந்தது. ஆனாலும், ஒரு மணி நேரத்திலேயே 1 மில்லியன் ஹிட்ஸ்களைக் கடந்ததா தயாரிப்பாளர் தாணு அறிவித்தார்.

‘கபாலி’ டீசர் குறித்து திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் கருத்துக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

அஜித் நடித்த ‘வேதாளம்’ திரைப்படத்தின் டீசர், விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் டீசர் புரிந்த சாதனைகளை சில மணி நேரங்களிலேயே ‘கபாலி’ டிசர் முறியடித்தது.

அது மட்டுமல்ல டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களிலும் ‘கபாலி’ டீசர் தொடர்ந்து டிரென்டிங்கில் இருந்து வருகிறது.

என்றும், எப்போதும், ரஜினி ரஜினிதான் என ‘கபாலி’ டீசர் மீண்டும் ஒரு முறை உணர்த்தியுள்ளது.

Read Previous

எல்லோருமே போட்டியாளர்கள் தான் – இசையமைப்பாளர் இஷான் தேவ்

Read Next

சாலையோரம் – விமர்சனம்

Most Popular