எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து இந்தியாவில் மிகப் பெரும் வசூல் சாதனை செய்த படம் ‘பாகுபலி’.
இப்படத்தை சீனா முழுவதும் ஜுலை 22ம் தேதி வெளியிடுகிறார்கள். இது பற்றிய அறிவிப்பை படத்தை சீனாவில் வெளியிடும் நிறுவனம் இன்று முறைப்படி அறிவித்துள்ளது.
அமீர்கான் நடித்த ‘பிகே’ திரைப்படம் சீனாவில் வெளியாகி வசூல் சாதனை செய்த இந்தியப் படமாக இருந்தது. அந்த சாதனையை ‘பாகுபலி’ படம் முறியடிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்கெனவே எழுந்துள்ளது.
சீன மொழியில் வெளியிடப்பட்டுள்ள ‘பாகுபலி’ படத்தின் டிரைலர், ‘பிகே’ படத்தின் டிரைலரை விட அதிகம் பார்க்கப்பட்டுள்ளது.
சீனா முழுவதும் சுமார் 5000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.