‘கபாலி’ தமிழ்நாடு உரிமை 60 கோடி ?

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘கபாலி’.

இப்படத்தின் வியாபாரம் கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக நடைபெற்று வந்தது.

தமிழ்நாடு தவிர வெளிநாட்டு உரிமை உட்பட மற்ற ஏரியாக்களின் வியாபாரம் பற்றி வந்த தகவல்கள் இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்திற்கம் நடக்காத வியாபாரமாகவே இருந்தது.

திரையுலக வட்டாரங்களில் விசாரித்த வரையில் ‘கபாலி’ படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

‘கபாலி’ படத்துடன் தயாரிப்பாளர் தாணு தயாரித்து வரும் மற்றொரு படமான ‘இந்திரஜித்’ படத்தின் உரிமையும் சேர்த்து வாங்கியுள்ளார்கள்.

‘கபாலி’ படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 700 திரையரங்குகள் வரையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

Amma Kanakku – Maths Tough – Official Video Song

Read Next

‘பாகுபலி’ சீனாவில் ஜுலை 22ல் ரிலீஸ்

Most Popular