ஜெய் நடிக்கும் ‘பிரேக்கிங் நியூஸ்’

ராகுல் பிலிம்ஸ் சார்பாக கே. திருக்கடல் உதயம் தயாரிப்பில் ஆன்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் விஷால் பீட்டர் இசையமைப்பில் ஜெய், பானு மற்றும் பலர் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் என்ற படம் இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

இந்தப் படத்தில் தேவ்கில், வேதாளம் வில்லன் ராகுல் தேவ், மந்திரா பேடி, இஷா கோபிகா, பழ. கருப்பையா, ராதா ரவி, கிரு துவாரகீஷ் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

ஷங்கர் இயக்கிய படங்களில் கிராபிக்ஸ் வல்லுனராகப் பணிபுரிந்தவர் ஆன்ட்ரூ பாண்டியன்.

சமூகத்தில் நடக்கும் அநீதிகள், பிரச்சனைகள், புலவாயா குண்டு வெடிப்பு போன்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு சாமானிய இளைஞன் சந்திக்கும் பிரச்சனையைப் பற்றிப் பேசும் படமாக இப்படம் உருவாக உள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக இப்படத்தில் புதிய தொழில் நுட்பத்துடன் 90 நிமிடங்கள் விஷூவல் எஃபெக்ட்ஸ் இடம் பெற உள்ளதாம்.

ஜெய் திரைப்படங்கள்…

Read Previous

தமிழ் சினிமா – பிப்ரவரி 21, 2019 வெளியாகும் தமிழ்ப் படம்

Read Next

தமிழ் சினிமா – பிப்ரவரி 22, 2019 வெளியாகும் தமிழ்ப் படங்கள்…

Most Popular