அழகிய அசுரா இயக்கத்தில், எஸ்டிஆர் இசையமைப்பில், ஓவியா, பொம்மு, மசூம், ஸ்ரீ கோபிகா, மோனிஷா, அன்சன் பால், தேஜ் ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘90 எம்எல்’.
இப்படத்தின் டிரைலர் இரண்டு வாரங்களுக்கு முன்பு யு டியுபில் வெளியாகும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
டிரைலரில் காட்சிகளிலும், வசனங்களிலும் ஆபாசம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
படத்தின் டிரைலர்தான் அப்படி இருக்கும். ஆனால், படத்தில் அது மாதிரியான காட்சிகளோ, வசனங்களோ இல்லை என படத்தின் இயக்குனர் அழகிய அசுரா என்கிற அனிதா உதீப் தெரிவித்திருந்தார்.
‘18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்’ என டிரைலரின் ஆரம்பத்தில் எச்சரிக்கை வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.
அந்த டிரைலர் தற்போது 90 லட்சம் பார்வைகளை யு டியுபில் கடந்துள்ளது.
‘90 எம்எல்’ படம் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகிறது.