ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் ‘கடாரம் கொண்டான்’.
கமல்ஹாசன் நடித்த ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம், நாசரின் மகன் அபிஹாசன், கமல்ஹாசன் மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படத்திற்காக விக்ரம், ஜிப்ரான் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
“தீச்சுடர் குனியுமா ?,
தேடலில் உள்ள வீரனின் உள்ளம் பணியுமா ?,
ஏறிவா மேலே மேலே”
என்று விவேகா எழுதிய பாடலை விக்ரம் பாடியுள்ளார்.
இது பற்றி ஜிப்ரான் கூறுகையில்,
“கடாரம் கொண்டான் படத்திற்காக விக்ரம் சார் பாடிய பாடல் புத்துணர்ச்சி தருவதாக, ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாக, உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது மகிழ்ச்சி. நிச்சயம் இந்தப் பாடல் தினமும் நமக்கு உற்சாகம் ஊட்டும் பாடலாக அமையும் என நம்புகிறேன்,” என்றார்.