தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நகைச்சுவை நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் யோகி பாபு.
அவர் திரையில் வந்தாலே ரசிகர்கள் சிரிக்க ஆரம்பிக்கும் அளவிற்கு மக்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.
நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு ஆகியோரது வரிசையில் யோகி பாபுவும் இப்போது இணைந்துவிட்டார் என திரையுலகத்தினர் தெரிவிக்கிறார்கள்.
‘தர்மபிரபு’ படத்தின் மூலம் கதாநாயகனகாவம் நடிக்க ஆரம்பித்துவிட்டார் யோகி பாபு.
ரஜினிகாந்த் முதல் புது நாயகர்கள் வரை யோகி பாபு தங்கள் படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என அவருக்காகக் காத்திருக்கும் நிலையும் இருக்கிறது என்கிறார்கள்.
‘தர்ம பிரபு’ படத்தில் யோகிபாபு எமதர்மன் ஆக நடிக்கிறாராம். இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். குழந்தைகளைக் கவரும் விதத்தில் யானை ஒன்றும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறதாம்.
கோடை விடுமுறையில் படத்தை வெளியிடத் திட்டமிட்டு வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரெங்கநாதன் தயாரிக்க, முத்துக்குமரன் இயக்கி வரும் இப்படத்தில் யோகி பாபு, ராதாரவி, ரமேஷ் திலக், ஜனனி அய்யர், ஷாம் சுஜித், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், மேக்னா நாயுடு, ரேகா, போஸ் வெங்கட், அழகம்பெருமாள், சரவண சக்தி, பாஸ்கி, சிந்து எனப் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்காக ஏவிஎம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது.
ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்திற்குப் பின் இங்கு எந்த படத்திற்கும் கோடிக்கணக்கான செலவில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்றதில்லை.
அரங்கத்தின் வெளி தோற்றத்தை பார்த்து வியந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், யோகி பாபு வளர்ந்து வரும் காமெடி நடிகர் அவர் நடிக்கும் படத்திற்கு இவ்ளோ பெரிய செட் தேவையா, கட்டுபடியாகுமா என தயாரிப்பாளரிடம் கூட கேட்டாராம்.
‘தர்ம பிரபு’ படத்தின் கதாபாத்திரத்திற்கு எல்லா வகையிலும் யோகி பாபு பொருத்தமாக இருந்ததால்தான் தாராளம செலவு செய்து எடுத்து வருவதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.
இப்படத்தை வாங்கி வினியோகிக்க இப்போதே பலரும் ஆர்வமாக இருக்கிறார்களாம்.