யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் ‘பைரவா’ டீசர்

சமூக வலைத்தளங்களில் தங்களது படங்களின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர், டீசர், டிரைலர் ஆகியவற்றை வெளியிடுவதில் திரையுலகத்தினருக்கு தற்போது மிகப் பெரும் ஆவல் உள்ளது.

ஃபேஸ்புக், டிவிட்டர் ஆகியவற்றில் மிகவும் பிரபலமாக விவாதிக்கப்படும் விஷயம் ‘டிரென்டிங்’ என அழைக்கப்படுகிறது. அதை சமீப காலமாக யு டியூபும் பயன்படுத்தி வருகிறது.

இப்போது யு டியூப் டிரென்டிங்கில் ‘பைரவா’ டீசர் முதலிடத்தில் உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு யூ டியூபில் வெளியான ‘பைரவா’ டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாகவே 30 லட்சம் பார்வைகளைப் பெற்றது.

48 மணி நேரத்திற்குள் 41 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்ததோடு இந்திய அளவில் டிரென்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது.

டீசரை இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரம் பேர் லைக் செய்தும் உள்ளனர்.

‘பன்ச்’ வசனங்களுடன் கூடிய ‘பைரவா’ டீசர் விஜய் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

Read Previous

சந்தானம் நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’

Read Next

Puriyaatha Puthir – Official Trailer