சந்தானம் நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’

‘தில்லுக்கு துட்டு’ படத்தின் மூலம் வெற்றிகரமான நாயகனாக உயர்ந்துள்ள சந்தானம் தற்போது ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்தப் படத்திற்குப் பிறகு சேதுராமன் இயக்கத்தில் ஒரு படத்திலும், செல்வராகவன் இயக்கத்தில் மற்றுமொரு படத்திலும் நடிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின.

அவற்றையடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ எனப் பெயரிட்டுள்ளார்கள். இந்தப் படத்தை ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் நாயகியாக ‘அனேகன்’ படத்தில் நாயகியாக நடித்த அமைரா நடிக்கிறார். மற்றும் ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, மயில்சாமி, கோவை சரளா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

முதல் முறையாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சந்தானம்.

ஜிப்ரான் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிக்கிறது.

இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நவம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

Read Previous

‘பைரவா’ டீசரின் ஒரு நாள் சாதனை

Read Next

யு டியூப் டிரென்டிங்கில் முதலிடத்தில் ‘பைரவா’ டீசர்