‘அச்சம் என்பது மடமையடா’ – நவம்பர் 11 ரிலீஸ்

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படம் நவம்பர் 11ம் தேதி வெளியாகிறது.

நேற்று டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

“படத்தின் வெளியீட்டிற்காகத்தான் புதிய டிரைலரையும் சமீபத்தில் வெளியிட்டோம். படத்தின் நாயகன் சிம்புவே டிரைலரில் என்ன மாதிரியான படம் என்பதைச் சொல்லிவிடுவோம் என்று சொன்னார். படத்தின் முதல் பாதியில் இனிமையான காதல் கதையும், அடுத்து ஆக்ஷனும் இருக்கும். ‘காக்க காக்க’ படம் கூட அப்படித்தான் உருவாக்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

தமிழ், தெலுங்கில் ஒரே நாளில் இப்படம் வெளியாகிறது.

Read Previous

‘காஷ்மோரா’ முதல் நாள் வசூல் 12 கோடி ?

Read Next

மீண்டும் நடிக்க வருகிறார் நக்மா ?