கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்து 28ம் தேதி வெளிவந்த படம் ‘காஷ்மோரா’.
இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 400 தியேட்டர்களிலும் ஆந்திரா, தெலுங்கானாவில் 600 தியேட்டர்களிலும், உலகம் முழுவதிலும் 1700 தியேட்டர்களிலும் வெளியானது.
இப்படத்தின் தமிழ்நாடு முதல் நாள் வசூல் 4.5 கோடி எனவும், ஆந்திரா, தெலுங்கானா, உலகம் முழுவதும் என சுமார் 12 கோடி ரூபாய் வரை வசூலித்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று தீபாவளி தினம் என்பதால் இந்த வசூல் இன்னும் அதிகரித்திருக்கலாம் என்கிறார்கள். இன்றும் விடுமுறை தினம் என்பதால் இந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படத்தின் வசூல் 30 கோடியைத் தொட வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்கிறார்கள்.