‘தர்மதுரை’ படத்திற்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு

சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 19ம் தேதி வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘தர்மதுரை’.

இப்படத்தைப் பாராட்டி தி.மு.க. பொருளாரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இயக்குனர் சீனு ராமசாமியைப் பாராட்டி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், படத்தின் கதை, திரைக்கதை, பாட்டு, நடிப்பு, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தப்பட்ட சிறப்பான படம். மென்மேலும் சமூக சீர்திருத்தப்பப் படங்களைத் தருக,” எனப் பாராட்டி எழுதியுள்ளார்.

மேலும், படத்தில் அவரைக் கவர்ந்த காட்சிகளைப் பற்றி விரிவாக எடுத்துச் சொல்லிப் பாராட்டியிருக்கிறார்.

Read Previous

புதிய கதைக் களத்துடன் ‘தப்பு தண்டா’

Read Next

Chandra Nandni, new serial in Vijay Tv