விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் ‘சைத்தான்’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடைபெற்றது.
விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், விஜய் ஆண்டனியின் வளர்ச்சி தனக்கு ஆனந்தத்தைத் தருகிறது என்றார்.
“விஜய் ஆண்டனி படங்களின் தலைப்புகள் எதிர்மறையாக இருந்தாலும், அந்தப் படங்களின் கதைக் களங்கள் யாவும் அவரைப் போலவே ரசிகர்களின் மனதை வெல்ல கூடியதாகத்தான் இருக்கும்.
தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் அவர் ஹீரோவாக வலம் வருவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. என்னுடைய மகன் விஜயின் வளர்ச்சியை கண்டு நான் எப்படி மகிழ்ச்சி கொள்கிறேனோ, அதேபோல் தான் விஜய் ஆண்டனியின் வளர்ச்சியையும் கண்டும் நான் ஆனந்தம் கொள்கிறேன்,” என்று பாராட்டினார் இயக்குநர் – தயாரிப்பாளர் – நடிகர் எஸ் ஏ சந்திரசேகர்.
‘சைத்தான்’ இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனரும் – தயாரிப்பாளருமான எஸ் ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், தயாரிப்பாளர் டாக்டர் கே கணேஷ் – ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’, தயாரிப்பாளர் டி சிவா – ‘அம்மா கிரியேஷன்ஸ்’, தயாரிப்பாளர் எஸ் ஆர் பாபு, தயாரிப்பாளர் ஷிபு தமீன், நடிகர் சிபிராஜ், இயக்குநர் ஜி என் ஆர் குமரவேல், இயக்குநர் சசி (பிச்சைக்காரன்), இயக்குநர் ஆனந்த் (இந்தியா – பாகிஸ்தான்), இயக்குநர் நிர்மல் குமார் (சலீம்), இயக்குநர் செந்தில் குமார் (வாய்மை), விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் அருள்பதி, காட்ரகட்ட பிரசாத், சமூக ஆர்வலர் மனோஜ், ‘வின் வின் மீடியா’ வேணு கோபால், ‘5 ஸ்டார்’ கதிரேசன், ‘ஸ்ரீ கிரீன்’ சரவணன் உட்பட பல திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மற்றும் ‘சைத்தான்’ படக்குழுவினர்களாகிய தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி – ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன்’, ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ், நடிகர் ஒய் ஜி மகேந்திரன், இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, கதாநாயகன் – இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, கதாநாயகி அருந்ததி நாயர், கிட்டி கிருஷ்ணமூர்த்தி, மீரா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயத், படத்தொகுப்பாளர் வீரா செந்தில் மற்றும் கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜ் ஆகியோரும் பங்கேற்றனர்.