ஜி.வி.பிலிம்ஸ் லிமிடெட் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ள படம் ‘தேவி 2’.
இந்த படத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர். விஜய் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.
இப்படத்தை ஏப்ரல் 12ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
‘தேவி’ படம் 2016ல் வெளிவந்து நல்ல வசூலைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்தது.
‘தேவி 2’ படம் பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில்,
“கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வந்து படம் பார்ப்பார்கள். இந்தப் படம் குடும்பத்துடன் வந்து ரசிக்கும்படியாகத்தான் உருவாக்கி இருக்கிறோம். காமெடி, சென்டிமென்ட், காதல், இசை, பொழுதுபோக்கு அம்சங்கள் படதில் உள்ளன.
பிரபுதேவா சாருடன் மீண்டும் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பை அளித்த பிரபுதேவா சாருக்கு நன்றி. அவரது எனர்ஜி அபாரமானது. முதல் பாகம் போலவே இந்தப் படத்திலும் அனைவரையும் ஈர்ப்பார்.
தமன்னா மிகச் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். முதல் பாகத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் எவ்வாறு ரசித்தார்கள் என்பது அவருக்குத் தெரியும். இந்த படத்தில் அதை விடவும் சிறப்பாக நடிக்க முயற்சிகள் எடுத்தார்.
இந்தக் குழுவில் இருந்த எல்லோரும் அளித்த சிறந்த பங்களிப்புதான் குறித்த காலத்தில் படத்தை முடிக்கக் காரணமாக இருந்தது.
வரும் கோடைகாலத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படமாக ‘தேவி 2’ நிச்சயம் இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.