‘பசங்க’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விமல். தொடர்ந்து அவர் நடித்து வெளிவந்த ‘களவாணி, வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, மஞ்சப் பை’ ஆகிய படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன.
பூபதி பாண்டியன் இயக்கியுள்ள ‘மன்னர் வகையறா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இப்போது பல புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள விமல், மேலும் பல புடங்களில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகளிலும் உள்ளார்.
இது குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய விமல்,
“அடுத்து சுசீந்திரன் தயாரிக்க அவரது உதவியாளர் சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். இந்தப் படத்தில் இமான் இசை, விஜய் மில்டன் ஒளிப்பதிவு, பாண்டிராஜ் வசனம் என பிரபலங்கள் இணைகிறார்கள்.
‘ராஜ தந்திரம்’ இயக்குனர் அமீத் படத்திலும் நடிக்க இருக்கிறேன். இத்துடன் இன்னும் நான்கு பிரபலங்களின் படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
2017 ம் ஆண்டு எனக்கு புதுத் தெம்பைத் தருவதாக இருக்கும்,” என்கிறார் விமல்.