வதந்திகளைப் பரப்புவதற்கென்றே ஒரு குழுவினர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்களோ என தோன்றுகிறது.
அடிக்கடி யாராவது மரணம் என்று வதந்திகளைப் பரப்பி விடுவார்கள். இப்போது புதிதாக கல்யாணம் என பரப்ப ஆரம்பித்துள்ளார்கள்.
அப்படித்தான் கடந்த இரண்டு நாட்களாக அனிருத்துக்கும், ஒரு பெண்ணுக்கும் ரகசியமாக திருமண நிச்சயம் நடந்ததாக யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள்.
பதறியடித்துக் கொண்டு பதிலளித்திருக்கிறார் அனிருத்.
“நிச்சயதார்த்தமா…?, எனக்கா…நான் சிங்கிள்தான்..நான் சின்னப் பையன்க,” என வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் அனிருத்.
இருந்தாலும் அனிருத்தின் டிவீட்டைப் பார்த்து, நடிகை சமந்தா, “அவள் ஸ்வீட்டான பெண்ணாச்சே, என்ன ஆச்சு..,” என தன் பங்கிற்கு வதந்திகளைக் கிண்டலடித்துள்ளார்.
காமெடி நடிகர் சதீஷ், “எல்லார் கிட்டயும் அப்படியே சொல்லுங்க ப்ரோ…நானும் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்,” எனக் கூறியிருக்கிறார்.
அனிருத் அறிமுகமான நாட்களிலிருந்தே கிசுகிசுக்களால் அதிகமாக பேசப்பட்டு வருகிறார்.