வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் தயாரித்து வரும் படம் ‘ஓடி ஓடி உழைக்கணும்.
சந்தானம் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நாயகியாக ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் நடிக்கிறார். மற்றும் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி, மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.
‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்திற்காக சமீபத்தில் சென்னையில் அதிரடியான ஒரு சண்டைக் காட்சி வில்லனாக நடிக்கும் ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுடன் சந்தானம் மோதுவது மாதிரியான படமாக்கப்பட்டது.
டூப் இல்லாமல் மேல் இருந்து கீழே தலைகீழாகத் தொங்கியும், மிக உயரத்திற்கு ஜம்ப் செய்தும் சந்தானம் ஸ்டன்ட் காட்சியில் நடித்து யூனிட் ஆட்களின் கைத் தட்டலைப் பெற்றார்.
சந்தானம் கராத்தேவில் பிரவுன் பெல்ட் வாங்கியதுடன், முறைப்படியான ஸ்டன்ட் விஷயங்களைக் கற்றதும் இதற்கு பக்க பலமாக உதவுகிறது என்று யூனிட் ஆட்கள் கூறுகிறார்கள்.
படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.