ஏஆர் ரகுமான் இசையில் ‘மார்வெல் கீதம்’

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான ‘அவெஞ்சர்ஸ் – என்ட்கேம்’ படம் ஏப்ரல் 25ம் தேதி ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

கெவின் ஃபைஜ் தயாரிக்க, அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ இரட்டை இயக்குநர்கள் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்கள். லூயிஸ் டி’எஸ்ஸ்பிஸிடோ, விக்டோரியா அலோன்சோ, மைக்கேல் கிரில்லோ, டிரின் டிரான், ஜான் ஃபேவ்ரூ மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாக தயாரிப்பில் பணிபுரிந்துள்ளனர். கிறிஸ்டோபர் மார்கஸ் & ஸ்டீபன் மெக்ஃபீலி திரைக்கதை எழுதியுள்ளனர்.

மார்வெல் சூப்பர் ஹீரோக்களுக்கு இந்தியாவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. அதற்கு ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படத்தின் மிகப் பெரும் வெற்றி ஒரு உதாரணம்.

தானோஸ் கிரகத்திலிருக்கும் மக்கள் தொகை பாதியாகி விட்டதாலும், சூப்பர் ஹீரோக்கள் பலரும் மறைந்து விட, மீதமுள்ள அவெஞ்சர்ஸ் எடுக்கும் இறுதி முடிவு தான் இந்த 22 படங்களின் கடைசிப் படமான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்.

‘அவெஞ்சர்ஸ் – என்ட்கேம்’ படத்திற்காக தமிழ், தெலுங்கு, இந்திய ஆகிய மொழிகளில் ‘மார்வெல் கீதம்’ ஒன்று இந்திய மார்வெல் ரசிகர்களுக்காக ஏஆர். ரகுமான் இசையமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

இது பற்றி ஏஆர் ரகுமான் கூறுகையில்,

“என் குடும்பத்திலேயே என்னைச் சுற்றி மார்வெல் ரசிகர்கள் சூழ்ந்திருப்பதால், அவெஞ்சர்ஸ்க்கு மிகவும் திருப்திகரமான மற்றும் பொருத்தமானவற்றைக் கொடுக்க எனக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது. மார்வெல் ஆர்வலர்கள் மற்றும் இசை ரசிகர்கள் இந்த பாடலை ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்கிறார்.

மார்வெல் இந்தியாவின் தலைமை அதிகாரி பிக்ரம் துக்கல் கூறுகையில்,

‘அவெஞ்சர்ஸ் – என்ட்கேம் ஒரு படம் மட்டும் அல்ல, இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் ரசிகர்களுக்கான உணர்ச்சிப்பூர்வமான ஒரு பயணம். ரசிகர்கள் மிகவும் விரும்பும் மார்வெல்லை ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கொண்டாடுவதுதான் சரியான வழி. ரசிகர்களின் அசாதாரண ஆதரவுக்கு நாங்கள் சிறிய அளவில் தெரிவிக்கும் நன்றி,” என்கிறார்

ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ள ‘அவெஞ்சர்ஸ் – என்ட்கேம்’ படத்திற்கான ‘மார்வெல் கீதம்’ வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும்.

Read Previous

பிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்

Read Next

சூப்பர் டீலக்ஸ், டிங் டாங் புரோமோ – வசந்தபாலன் பாராட்டு

Most Popular