தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘என்ஜிகே’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தை மே 31 வெளியிட உள்ளார்கள்.
அந்தப் படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘காப்பான்’ படம் வெளிவரும். இப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடையும் நிலையில் உள்ளது.
அடுத்து சூர்யா நடிக்கும் 38வது படத்தின் பூஜை இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கோங்கரா இயக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
‘சர்வம் தாள மயம்’ படத்தில் நாயகியாக நடித்த மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்கிறார்.
நாளை முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.