‘நான்தான் ஷபானா’ – ஆக்ஷன் ஹீரோயினாக டாப்ஸீ

ஷிவம் நாயர் இயக்கத்தில் டாப்ஸீ, அக்ஷய் குமார், பிருத்விராஜ், மனோஜ் பாஜ்பாய், அனுபம் கேர் மற்றும் பலர் நடிக்க ஹிந்தியில் உருவாகியுள்ள படம் ‘நாம் ஷபானா’.

இப்படம் ‘நான்தான் ஷபானா’ என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஹிந்திப் படம் வெளியாகும் மார்ச் 31ம் தேதியன்றே தமிழிலும் வெளியாகிறது.

ஹிந்தியில் வெளிவந்த ‘பேபி’ திரைப்படத்தில் 20 நிமிடங்கள் மட்டுமே வரும் ஷபானா என்ற கதாபாத்திரத்தில் டாப்ஸீ நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தை டெவலப் செய்து தனி படமாக ‘நாம் ஷபானா’ என்ற பெயரில் தயாரித்திருக்கிறார்கள்.

படம் பற்றி டாப்ஸீ கூறியதாவது,

“ஹிந்தியில் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகமாக வெளிவருகின்றன. இந்த மாதத்தில் மட்டுமே அப்படி 3 படங்கள் வெளிவந்துள்ளன.

ஹிந்தியில் என்னை பக்கத்துவீட்டுப் பெண் போலவே பார்க்கிறார்கள். அங்கு நான் நடிக்கும் 6வது படம் இது.

இந்தப் படத்தில் நடித்துள்ள உளவாளி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக உளவாளிகள் பற்றி பல விஷயங்களைக் கேட்டு அறிந்தேன். பல புத்தகங்களைப் படித்தேன்.

படத்தில் எனக்கு 4 சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. அதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி பெற்றேன். படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் போது காயம் கூட ஏற்பட்டது.

தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், என்னைத் தேடி நல்ல கதாபாத்திரங்கள் வருவதில்லை. பலரும் என்னை ஆங்கிலோ இந்தியப் பெண்ணாகவே பார்க்கிறார்கள். வெற்றி மாறன் இயக்கத்தில் நடிப்பதென்றால் கதை கூட கேட்க மாட்டேன்.

தமிழில் நான் நடித்த படங்களில் ஓரிரு படங்களைத் தவிர மற்றவை பெரிய வெற்றிப் படங்கள் இருந்தும், ஏன் இங்கு வாய்ப்புகள் வரவில்லை என்பது தெரியவில்லை.

‘நாம் ஷபானா’ படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாவது எனக்கு மகிழ்ச்சிதான்,” என்கிறார் டாப்ஸீ.

Read Previous

சுரேஸ், ‘ஒரு முகத்திரை’யின் புதிய முகம்

Read Next

What is the plot of Kaatru Veliyidai ?