திருட்டு விசிடி கட்டுப்படுத்த விஷால் புதிய அறிவிப்பு

கார்த்திகேயன் பெருமையுடன் வழங்க மேக் 5 ஸ்டுடியோஸ் என்ற பட நிறுவனம் தயாரிப்பில் விஜய் R. ஆனந்த், A.R.சூரியன் இருவரது இயக்கத்தில், யுவன், ஷ்ராவியா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘விளையாட்டு ஆரம்பம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் நடிகரும் தயாரிபளார் சங்க தலைவருமான விஷால் பேசியதாவது,

”எனக்கு கடுமையான காய்ச்சல் அடிக்கிறது. ஆனால் ஆஸ்பத்திரி போவதாக சொல்லிவிட்டு இந்த விழாவிற்கு வந்து விட்டேன்.

பெரோஸ்கான் மகன் யுவன் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு அப்பாவிற்கு தன் மகன் பெரிய ஹீரோவாவது ரொம்ப பிடிக்கும் எங்க அப்பாவும் என்னை இப்படிதான் வளர்த்தார். அதனால் தான் இந்த விழாவிற்கு வந்தேன்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறோம்.

தியேட்டரில் படம் ஓடும் போது அதை கேமரா வைத்து காப்பி செய்து திருட்டு வி.சி.டி, பைரஸி தயாரிக்க வேலை செய்பவர்களை கையும் களவுமாக பிடித்து தியேட்டர் நிர்வாகத்திடம் கொடுத்து போலீஸில் எப்.ஐ.ஆர் போட உதவுபவருக்கு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ருபாய் ஒரு லட்சம் பரிசாக தரப்படும்.

இந்த நடவடிக்கையால் திருட்டு வி.சி.டி தயாரிப்பு கட்டுப்படுத்தப்படும்,” என்று விஷால் கூறினார்.

படத்தின் இசையை இயக்குனர் பாலா வெளியிட்டு சிறப்பித்தார்.

Read Previous

விவசாயத்துக்கு ஆதரவு தரும் ‘தெரு நாய்கள்’

Read Next

‘வனமகன்’ பாடல்களை நா.முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்த மதன் கார்க்கி