அம்மா க்ரியேஷன்ஸ் டி. சிவா தயாரிப்பில் ஓடம் இளவரசு இயக்கத்தில் டி. இமான் இசையமைப்பில் அதர்வா, ரெஜினா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி, சூரி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் வரும் ஜூன் 23 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களின் பூஜை மற்றும் இசை வெளியீட்டு விழாவை எப்போதும் புதுமையாகவும் , பிரம்மாண்டமாகவும் நடத்துவார்கள்.
புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாகக் காட்சியளிக்கும் புகழ்பெற்ற கலைவாணர் அரங்கத்தில் முதல் முறையாக நடக்க உள்ள திரைப்பட விழா ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் இசை விழா என்பது குறிப்பிடத்தக்கது.