நாளை ‘விஜய் 61’ பட தலைப்பு அறிவிப்பு

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் சார்பாக முரளி ராமசாமி, ஹேமா ருக்மணி தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேல், கோவை சரளா, யோகி பாபு, ராஜேந்திரன் ஆகியோருடன் சத்யராஜ் நடிக்கும் படத்தின் தலைப்பு நாளை மாலை 6 மணிக்கு முதல் பார்வையுடன் வெளியிடப்பட உள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்த நாள் ஜுன் 22ம் தேதி வருவதால் ஒரு நாள் முன்னதாகவே விஜய் ரசிகர்களுக்காக நாளையே வெளியிட உள்ளார்கள்.

பல கோடி ரூபாய் செலவில் சென்னையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட அரங்குகள், வெளிநாடுகளில் படப்பிடிப்பு என அதிக பொருட் செலவில் தயாராகி வரும் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி வருகிறது.

அட்லீ – ஏ.ஆர்.ரகுமான் – விஜய் என தேனாண்டாஸ் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இந்த புதிய கூட்டணியில் இணைந்துள்ளது.

‘பாகுபலி 2’ படத்தின் கதை ஆசிரியரான விஜயேந்திர பிரசாத், ரமணகிரிவாசன் இருவரும் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு – ஜி.கே.விஷ்ணு , படத் தொகுப்பு – ரூபன், கலை – முத்துராஜ், சண்டைப் பயிற்சி – அனல் அரசு என முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக உழைத்து வருகிறார்கள். விவேக் பாடல்களை எழுதுகிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக நடத்த உள்ளார்கள். அக்டோபர் மாதம் இப்படம் உலகம் முழுவதும் எண்ணற்ற திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இராம.நாராயணன் ஆசியுடன் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 100வது படம் என்ற பெருமை இந்தப் படத்திற்கு உண்டு.

Read Previous

ஜுன் 23ல் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ இசை வெளியீடு

Read Next

Balloon – Official Teaser