1000 தியேட்டர்களில் ‘அஅஅ’ அசத்தல் ரிலீஸ்

குளோபர் இன்ஃபோடெயின்மென்ட் மைக்கேல் ராயப்பன் வழங்க, செராபின் ராய சேவியர் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் சிம்பு, தமன்னா, ஸ்ரேயா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’.

இப்படம் வரும் 23ம் தேதி உலகம் முழுவதும் 1000 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் 450 தியேட்டர்களிலும், கேரளாவில் 75, கர்நாடகாவில் 50, வட இந்தியாவில் 50, வெளிநாடுகளில் 300 தியேட்டர்களிலும் வெளியாகிறது.

இப்படத்தை இரண்டு பாகமாகத் தயாரித்துள்ளார்கள். முதல் பாகம் தான் இந்த வாரம் வெளியாகிறது. இரண்டாவது பாகம் பின்னர் வெளியாகும்.

படத்தில் சிம்பு நடிக்கும் மதுரை மைக்கேல், அஸ்வின் தாத்தா ஆகிய கதாபாத்திரங்களை டீசர் மூலமும், பாடல்கள் மூலமும் ஏற்கெனவே பிரபலப்படுத்திவிட்டார்கள்.

இப்படத்தை இயக்கியுள்ள ஆதிக் ரவிச்சந்திரன் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்கியுள்ள இரண்டாவது படம் இது.

சிம்பு ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகவும் கொண்டாட்டமான படமாக இருக்கும் என்கிறார் இயக்குனர் ஆதிக்.

Read Previous

Nenjam Marappathillai – Official Trailer 3

Read Next

ஜுன் 23ல் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ இசை வெளியீடு

Most Popular