‘நிபுணன்’ மக்களால் நிச்சயம் ரசிக்கப்படும் – பிரசன்னா

எந்த விதமான பந்தாவும் இல்லாத ஒரு யதார்த்த நடிகர் பிரசன்னா. எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதிக்க வேண்டும் என நினைப்பவர்.

நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் போதே ‘அஞ்சுதே’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியவர். பல இயக்குனர்கள் கதை எழுதும் போதே சில குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பிரசன்னாதான் நடிக்க வேண்டும் என யோசித்து எழுதியிருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுபவர்.

பல நடிகர்களுடன் எந்த ஈகோவும் இல்லாமல் இணைந்து நடிக்கும் பிரசன்னா இப்போது அர்ஜுனுடன் இணைந்து நடித்துள்ள ‘நிபுணன்’ படம் நாளை மறுநாள் ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ளது.

‘நிபுணன்’ பற்றிய தனது அனுபவங்களைப் பற்றி பிரசன்னா…..

”இப்படத்தின் இயக்குனர் அருண் வைத்யநாதன் எனது நீண்ட நாள் நண்பர். ‘நிபுணன்’ ஒரு சராசரி போலீஸ் திரில்லர் படம் கிடையாது. ‘நிபுணன்’ படத்தின் திரைக்கதையையும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களையும் மிக அருமையாகவும் சுவாரசியமாகவும் இயக்குனர் அமைத்துள்ளார்.

நான் இப்படத்தில் ஒரு புலனாய்வு அதிகாரியாக நடித்துள்ளேன். ஒரு வழக்கமான புலனாய்வு போலீஸ் கதாபாத்திரம் அல்ல என்னுடையது. அர்ஜுன் சாருடன் நடித்தது ஒரு அற்புதமான அனுபவம். 150 படங்கள் நடித்த பின்னரும், அவரது ஸ்டைலும், அவர் தன் உடற்கட்டை பராமரிக்கும் விதமும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக வரலக்ஷ்மி சிறப்பாக நடித்துள்ளார். அவருடன் பணிபுரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. போலீஸ் அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கையையும் இப்படத்தில் மிக யதார்த்தமாக பதிவுசெய்துள்ளோம். இப்படத்தின் எல்லா நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். இந்த படமும் எனது கதாபாத்திரமும் மக்களால் நிச்சயம் ரசிக்கப்படும் என நம்புகிறேன்,” என்கிறார் பிரசன்னா.

Read Previous

சிறிய படங்களுக்காக சட்டம் போட வேண்டும் – பாக்யராஜ்

Read Next

7 வருடங்கள் கழித்து ஆரம்பமாகும் ‘தலைவன் இருக்கிறான்’