‘ஓ அந்த நாட்கள்’, படப்பிடிப்பு நிறைவு

‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் மூலம் இசையமைப்பாளரான அறிமுகமானவர் ஜேம்ஸ் வசந்தன்.

2015ம் ஆண்டில் வெளிவந்த ‘வானவில் வாழ்க்கை’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார்.

தற்போது ராதிகா, சுஹாசினி, ஊர்வசி, குஷ்பு முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.

இந்தப் படத்தில் நடிக்கும் நான்கு சீனியர் நடிகைகளும் அவர்கள் இதற்கு முன் நடித்த பிரபலமான கதாபாத்திரங்களின் பெயர்களிலேயே நடிக்கிறார்கள்.

ராதிகா, ‘ரெட்டைவால் குருவி’ கதாபாத்திரமான ராதா என்ற பெயரிலும், சுஹாசினி, ‘சிந்து பைரவி’ கதாபாத்திரமான சிந்து பெயரிலும், ஊர்வசி, ‘மைக்கேல் மதன காமராஜன்’ கதாபாத்திரமான திரிபுரசுந்தரி பெயரிலும், குஷ்பு ‘மன்னன்’ கதாபாத்திரப் பெயரான மீனா பெயரிலும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் ஆரம்பமாகி அங்கு பல நாட்கள் நடந்தது. அதன் பின் சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றுள்ளது.

விரைவில் படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது.

Read Previous

7 வருடங்கள் கழித்து ஆரம்பமாகும் ‘தலைவன் இருக்கிறான்’

Read Next

நிபுணன் விமர்சனம்