ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா இயக்கத்தில் விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படம் ‘மதுர வீரன்’.
V-ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வையை விஜயகாந்த் வெளியிட்டார்.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், ’சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தையடுத்து அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘மதுர வீரன்’.
ஜல்லிக்கட்டு விளையாட்டை கருவாகக் கொண்ட படம். வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞராக சண்முக பாண்டியன் நடிக்கிறார்.
அவரது ஜோடியாக அறிமுக நாயகி மீனாட்சி நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, வேல ராமமூர்த்தி, மைம் கோபி, P.L.தேனப்பன், மாரிமுத்து, ’நான் கடவுள்’ராஜேந்திரன், பாலசரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இயக்கத்துடன் ஒளிப்பதிவையும் செய்கிறார் பி.ஜி. முத்தையா. சந்தோஷ் தயாநிதி இசையமைக்க யுகபாரதி பாடல்களை எழுதுகிறார்.
படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரம் மதுரையில் நடைபெறவுள்ளது. 15 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று அத்துடன் நிறைவடைகிறது.