இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களிடம் போட்டி இருந்தாலும் பொறாமை, வெறுப்பு என்ற எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பது ஆரோக்கியமாக இருக்கிறது.
யுவன்ஷங்கர் ராஜா, இமான், அனிருத், ஜி.வி.பிரகாஷ், ஷான் ரோல்டன் உள்ளிட்ட மற்ற இசையமைப்பாளர்களும் அவர்களுடைய படங்களில் மாறி மாறி பாடிக் கொடுத்து வருகிறார்கள்.
மற்ற இசையமைப்பாளர்கள் அழைத்தால் எந்த வித தயக்கமும் காட்டாமல் உடனே பாடிக் கொடுக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது அனிருத், முதன் முறையாக யுவன்ஷங்கர் ராஜா இசையில் ‘பலூன்’ படத்தில் பாடிக் கொடுத்திருக்கிறார்.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியாவின் புகழ் பெற்ற டயலாக்கான ‘நீங்க ஷட்அப் பண்ணுங்க’ என்ற வரிகளில் தொடங்கும் அந்தப் பாடல் சமீபத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது.
யுவனின், இசையில் அனிருத்தின் குரலில் அந்தப் பாடல் நம்மை ‘ஷட்அப்’ பண்ணி ரசிக்க வைக்கும் என எதிர்பார்க்கலாம்.