ஜுலி, ஆர்த்தி – ரீ என்ட்ரி, நன்றாக சமாளித்த ‘பிக் பாஸ்’

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நேற்று ஜுலியும், ஆர்த்தியும் ரீ-என்ட்ரி ஆனார்கள். அதற்கான புரோமோ நேற்று காலை வெளியானதிலிருந்து நேயர்கள், ஓவியாவின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அது குறித்து அவர்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள்.

நேயர்களால் குறைந்த வாக்களிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் எந்த ஒரு வாக்கெடுப்பும் இல்லாமல் எப்படி வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள் என்பதுதான் அனைவரது கருத்தாக இருந்தது.

ஆனால், நிகழ்ச்சி நேற்று ஆரம்பமானதும் ஜுலியும், ஆர்த்தியும் ஒரு வாரம் மட்டுமே விருந்தினர்களாக வந்துள்ளார்கள் என பிக் பாஸ் அறிவித்தார்.

இருந்தாலும் ஆர்த்தியும், ஜுலியும் வீட்டுக்குள் வந்த பிறகு ஒரு வாரம் மட்டுமே இருக்கப் போகிறோம் என யாரிடமும் சொல்லவில்லை. அதிலும், ஜுலி ஒரு நாள் மட்டுமே வந்திருக்கிறேன் என வழக்கம் போல பொய் சொல்கிறார்.

ஆர்த்தியும், ஜுலியும் ரீ-என்ட்ரியாக வருவதற்கு நேயர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நேற்று நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பு, ஏதோ ‘எடிட்’ செய்து அவர்கள் ஒரு வாரம் மட்டுமே வந்துள்ளார்கள் என பிக் பாஸ் நன்றாகவே சமாளித்தார்.

போட்டியாளர்களுக்கு வாக்களிக்க வைத்து வெளியேற்றியவர்கள், அதே போல மீண்டும் ‘வைல்ட்-கார்டு’ மூலம் வருவதென்றால் வாக்களிக்க வைத்துதான் உள்ளே விட வேண்டும் என்று நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்குத் தெரியாதா எனப் பலரும் கேள்வி கேட்கின்றனர்.

வரும் சனிக்கிழமை கமல்ஹாசன் வரும் போது இதற்கு நிச்சயம் ஒரு விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

Read Previous

‘கலிஜு, கொய்யால’ – வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லையா ‘வேலைக்காரன்’ ?

Read Next

ரஜினியை பின்னுக்குத் தள்ளிய ஓவியாவின் புகழ்