20 வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் மோகன்லால், பிரகாஷ்ராஜ்

தென்னிந்தியத் திரையுலகத்தின் திறமையான நடிகர்களில் முக்கியமானவர்கள் மோகன்லால், பிரகாஷ்ராஜ்.

இருவரது நடிப்புக்கும் மொழி எல்லைகள் கிடையாது. தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் தங்களது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

மணிரத்னம் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளிவந்த ‘இருவர்’ படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். அதன் பின் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘ஓடியன்’ என்ற மலையாளப் படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

வி.எ. ஸ்ரீகுமார் இயக்கும் இந்தப் படத்தில் மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் உள்ள பாலாக்காட்டில் நடைபெற்று வருகிறது.

Read Previous

நெருப்புடா – ஆலங்கிளியே….பாடல் வீடியோ

Read Next

பவுன்சர்கள் அட்டகாசம், அன்று சிவகார்த்திகேயன், இன்று மகேஷ் பாபு