விஜய் 63 பட சாட்டிலைட் உரிமை 28 கோடி ?

அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் விஜய்யின் 63வது படத்தின் சாட்டிலைட் உரிமையை 28 கோடி ரூபாய் கொடுத்து சன் டிவி வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை ஜீ தமிழ் டிவி 19 கோடி கொடுத்து வாங்கியதாம். ‘சர்கார்’ படத்தை சன் டிவியே தயாரித்ததால் அதற்கான விலையாக அவர்கள் என்ன போட்டார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.

‘சர்கார்’ படத்தின் டிவி ஒளிபரப்பு ரேட்டிங் அதிகமாகவே வந்தது. அதனால், விஜய் நடிக்கும் படத்தைத் தவறவிடக் கூடாது என படத்தின் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியதாம். கடைசியில் அதை சன் டிவி கைப்பற்றியதாகச் சொல்கிறார்கள்.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நடைபெற்ற இந்த வியாபாரம்தான் இப்போது கோடம்பாக்கத்தின் சூடான செய்தி.

Read Previous

இனி, 6 மாதத்திற்கு ஒரு படம் – சிவகார்த்திகேயன்

Read Next

இரண்டு வருடங்களுக்குப் பிறகு இளமையான மாதவன்