யு டியூப் இணையதளத்தில் திரைப்படங்களின் டீசர்கள், டிரைலர்கள் பதிவேற்றப்பட்டு ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கப்பட்ட பிறகு அதிலும் எந்த டீசர் சாதனை படைக்கிறது என்பதில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்களுக்குள் அதிகமான மோதல் எழுந்து வருகிறது.
குறிப்பாக, விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இந்த விஷயத்தில் சமூக வலைத்தளங்களில் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே இருவரது படங்களின் டீசர், டிரைலர் வெளியாகும் போது ஒன்றுக்கொன்று முந்தி சாதனை படைத்து வருகிறது.
அஜித் நடித்து வெளிவந்த ‘விவேகம்’ படத்தின் டீசர் உலக அளவில் அதிக லைக்குகளைப் பெற்று தற்போது புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
இதுவரை அதிக லைக்குகளைப் பெற்று முதலிடத்தில் இருந்த ‘ஸ்டார்வார்ஸ் – தி லாஸ்ட் ஜெடி’ பட டீசர் லைக்குகளை சற்று முன் ‘விவேகம்’ டீசர் முறியடித்துள்ளது.
‘ஸ்டார் வார்ஸ் – தி லாஸ்ட் – ஜெடி’ டீசர் பெற்றிருந்த 5,72,000 லைக்குகளை ‘விவேகம்’ டீசர் கடந்துவிட்டது.
டிவிட்டரில் ‘விவேகம் டீசர்’ தற்போது டிரென்டிங்கில் வந்து கொண்டிருக்கிறது. ‘விவேகம்’ படம் வெளிவந்து வசூலில் சாதனை படைத்ததோ இல்லையோ, படத்தின் டிசர் உலக சாதனை படைத்துவிட்டது.
விவேகம் டீசர்
Star Wars: The Last Jedi Official Teaser