மீண்டும் இணையும் இயக்குனர் விஜய், பிரபு தேவா கூட்டணி

‘தேவி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் – பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைய உள்ளார்கள்.

இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். சாம் சி.எஸ். இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகிறார்.

ஆண்டனி படத்தொகுப்பு செய்ய நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹிந்தியில் ‘லவ் இன் டோக்யோ, ஜூகுனு’ போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த பிரமோத் பிலிம்ஸ் இப்படத்தை, டிரைடென்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனுடன் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Read Previous

இது வேதாளம் சொல்லும் கதை – டீசர்

Read Next

ஹர ஹர மஹாதேவகி, ‘அடல்ட்ஸ் ஒன்லி’ படம் – கௌதம் கார்த்திக்