சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’.
இந்தப் படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இவர்களுடன் நட்டி, RK சுரேஷ், சூரி, யோகி பாபு, வேலராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ஷீலா, சந்தானலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ‘யு’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
அடுத்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை படம் வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.